கதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதி1கதி2

கதி1

பெயர்ச்சொல்

 • 1

  (வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும்) நிலைமை; நிலை.

  ‘மழை பெய்யாவிட்டால் விவசாயிகளின் கதி என்ன ஆவது?’
  ‘உங்கள் குடும்பத்துக்கு இப்படி ஒரு கதியா?’
  ‘உனக்கு நல்ல கதி கிடைக்காது’
  ‘குடித்துக்கொண்டே இருந்தால் உன் அண்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும்’

 • 2

  குறிப்பிட்ட ஒன்றைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று ஒருவர் இருக்கும் நிலைமை.

  ‘என் வீட்டுக்காரர் வேலையே கதி என்று கிடக்கிறார்’
  ‘சீட்டாட்டமே கதி என்று இருந்தால் குடும்பம் என்ன ஆகும்?’

கதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதி1கதி2

கதி2

பெயர்ச்சொல்

 • 1

  (இயங்கும் ஒன்றின் அல்லது நடைபெறும் ஒன்றின்) போக்கு.

  ‘வாழ்க்கை இயந்திர கதியில் போகிறது’
  ‘வேலை இந்த கதியிலேயே நடந்தால் சீக்கிரம் முடிந்துவிடும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வேகம்.

  ‘கடுகதி வண்டி’