தமிழ் கதிகலங்கு யின் அர்த்தம்

கதிகலங்கு

வினைச்சொல்-கலங்க, -கலங்கி

 • 1

  (மோசமான நிகழ்வு, விளைவு போன்றவற்றின் பாதிப்பால்) நிலைகுலைதல்.

  ‘ஐந்து மணிக்குப் பள்ளியிலிருந்து வந்திருக்க வேண்டிய பையன் எட்டு மணி ஆகியும் வராததால் கதிகலங்கிப்போனேன்’
  ‘தான் முதலீடு செய்திருந்த நிதி நிறுவனம் மூடப்பட்டுவிட்டது என்பதைக் கேள்விப்பட்டு அப்பா கதிகலங்கிவிட்டார்’

 • 2

  (ஒருவருக்கு) பயமும் கலக்கமும் தோன்றுதல்.

  ‘அப்பாவின் கோபத்தை நினைத்தாலே எனக்குக் கதிகலங்குகிறது’