கதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதை1கதை2கதை3

கதை1

வினைச்சொல்கதைக்க, கதைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரோடு ஒருவர்) பேசுதல்; உரையாடுதல்.

  ‘நாங்கள் இரவு வெகு நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம்’
  ‘நீங்கள் யாரைப் பற்றிக் கதைக்கிறீர்கள்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு நம்ப முடியாத அளவுக்குக் கற்பனையாக ஒன்றைக் கூறுதல்.

  ‘நடிகர் கமலஹாசனுடன் கைகுலுக்கினாயா? சும்மா கதைக்காதே’
  ‘படம் எடுக்கப் போகிறானாம். வெறுமனே கதைக்கிறான்’

கதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதை1கதை2கதை3

கதை2

பெயர்ச்சொல்

 • 1

  ஏதேனும் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை மையமாக வைத்துச் சுவையுடன் சொல்லப்படுவது.

  ‘என் கதைகளைப் பெண்கள் விரும்பிப் படிக்கிறார்கள்’
  ‘பாட்டி கதை சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்’

 • 2

  நடந்ததைப் பற்றிய விவரத் தொகுப்பு.

  ‘அவர் சிறைக்கு வந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்’

 • 3

  (ஒருவரின்) வாழ்க்கையையும் நடத்தையையும் பற்றிக் கூறப்படும் செய்தி.

  ‘இந்த நடிகரைப் பற்றி எத்தனையோ கதைகள்!’

 • 4

  நம்ப முடியாத விவரிப்பு.

  ‘இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக அவன் சொல்வது வெறும் கதை!’

 • 5

  விவாதத்துக்கு உள்ளான பேச்சு அல்லது விஷயம்.

  ‘ஏன் கதையை வளர்த்துக்கொண்டே போகிறாய், சீக்கிரம் முடி’

 • 6

  பேச்சு வழக்கு (கதை போன்ற) வாழ்க்கை.

  ‘ஊரைப் பகைத்துக்கொண்டு நாற்பது வருடம் வாழ்ந்தவரின் கதையும் முடிந்தது’
  ‘அவர்கள் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்’

 • 7

  கதி.

  ‘நான் பணம் எடுத்தது வெளியே தெரிந்தால், என் கதை அவ்வளவுதான்’
  ‘நீ வீட்டை விட்டுப்போய்விட்டால் அவள் கதை என்ன ஆவது?’

கதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதை1கதை2கதை3

கதை3

பெயர்ச்சொல்

 • 1

  (பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட) நீண்ட பிடியும் உருண்டை வடிவத்தில் கனமான தலைப்பாகமும் கொண்ட ஒரு வகை ஆயுதம்.

உச்சரிப்பு

கதை

/(g-)/