தமிழ் கதையை முடி யின் அர்த்தம்

கதையை முடி

வினைச்சொல்முடிக்க, முடித்து

  • 1

    ஒருவரைக் கொல்லுதல்.

    ‘தன் குடும்பத்தை வேரோடு அழித்தவர்களின் கதையை முடிக்கும் வெறியோடு அவன் அலைந்துகொண்டிருக்கிறான்’
    ‘தன் கதையை முடிக்கத் திட்டம் போடுகிறார்கள் என்று தெரிந்ததும் அவன் ஊரை விட்டே ஓடிவிட்டான்’