தமிழ் கந்தல் யின் அர்த்தம்

கந்தல்

பெயர்ச்சொல்

 • 1

  கிழிந்து துண்டுதுண்டாக இருப்பது.

  ‘படுக்க இந்தக் கந்தல் பாய்தான் உனக்குக் கிடைத்ததா?’
  ‘சாக்கு கந்தல்கந்தலாகக் கிழிந்திருக்கிறது’

 • 2

  கிழிந்த துணி.

  ‘கம்பிக் கொடியில் கை அகலத்தில் ஒரு கந்தல் தொங்கிக்கொண்டிருந்தது’
  ‘ஏன் இந்தக் கந்தலைக் கட்டிக்கொண்டிருக்கிறாய்?’