தமிழ் கன்னி யின் அர்த்தம்

கன்னி

பெயர்ச்சொல்

 • 1

  திருமணமாகாத இளம் பெண்.

 • 2

  கன்னித் தன்மை நீங்காத பெண்.

 • 3

  திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் பெண்.

 • 4

  சோதிடம்
  இளம் பெண்ணின் உருவத்தைக் குறியீடாக உடைய ஆறாவது ராசி.

 • 5

  (பெயரடையாக வரும்போது) முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது.

  ‘கன்னிப் பேச்சு’
  ‘கன்னி முயற்சி’
  ‘இது அந்த கிரிக்கெட் வீரர் அடித்த கன்னி சதம் ஆகும்’

தமிழ் கன்னி யின் அர்த்தம்

கன்னி

பெயர்ச்சொல்

 • 1

  கூம்பிய நீண்ட முகத்தையும் நீளமான கால்களையும் கொண்ட, மிக வேகமாக ஓடக்கூடிய, வேட்டைக்குப் பயன்படுத்தப்படும், கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும், ஒரு வகை நாட்டு நாய்.