தமிழ் கனம் யின் அர்த்தம்

கனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றைத் தூக்கும்போது உணரும்) எடையின் மிகுதியான அளவு; பளு.

  ‘இந்த மேஜை இவ்வளவு கனமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை’
  உரு வழக்கு ‘நாளுக்கு நாள் அவருடைய கவலையின் கனம் கூடியது’

 • 2

  (ஒருவரின் உடலை, ஒரு பொருளின் பெரிய அளவைக் குறித்து வரும்போது) பருமன்; தடி.

  ‘தன்னுடைய கனமான சரீரத்தை வைத்துக்கொண்டு நடப்பதற்கே அவர் கஷ்டப்பட்டார்’

 • 3

  (ஒரு பொருளின்) பருமன்.

  ‘சட்டத்தின் கனம் கால் அங்குலம்’
  ‘அரை அங்குல கனத்தில் இரண்டு பலகைகள் வேண்டும்’

 • 4

  (இலக்கியத்தில்) பொருள் செறிவு.

  ‘அவருடைய எழுத்தில் கனம் அதிகம்’

 • 5

  (-ஆக, -ஆன) (காலடியின்) அழுத்தம்.

  ‘மணலில் காலடி கனமாகப் பதிந்திருந்தது’

தமிழ் கனம் யின் அர்த்தம்

கனம்

பெயரடை

 • 1

  நீதிபதியை அழைக்கும்போது ‘மரியாதைக்கு உரிய’ என்ற பொருளில் பயன்படுத்தும் ஒரு சொல்.

  ‘கனம் நீதிபதி அவர்களே’

தமிழ் கனம் யின் அர்த்தம்

கனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வேதத்தைக் குறிப்பிட்ட முறையில் ஓதும் முறை.