தமிழ் கனல் யின் அர்த்தம்

கனல்

வினைச்சொல்கனல, கனன்று

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (நெருப்பு) கடும் சூட்டுடன் இருத்தல்; தகித்தல்.

  ‘அடுப்பில் நெருப்பு கனன்றுகொண்டிருந்தது’
  ‘உலையில் தீ கனன்றது’
  உரு வழக்கு ‘நெஞ்சில் கோபம் கனன்று எழுந்தது’

தமிழ் கனல் யின் அர்த்தம்

கனல்

பெயர்ச்சொல்

 • 1

  (நெருப்பு, வெயில் ஆகியவற்றின்) கடுமையான சூடு; தகிப்பு.

  ‘அடுப்பில் கனல்’
  உரு வழக்கு ‘அவருடைய கண்களில் கோபக் கனல் வீசுகிறது’

 • 2

  (பெரும்பாலும் உவமையாக) நெருப்பு.

  ‘கனல் கக்கும் சொற்பொழிவு’
  ‘சுதந்திரக் கனல்’