கனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கனி1கனி2கனி3

கனி1

வினைச்சொல்கனிய, கனிந்து

 • 1

  (பழம்) பழுத்தல்.

  ‘மரத்திலேயே கனியும் மாம்பழங்கள் மிகுந்த சுவையுடன் இருக்கும்’
  ‘பப்பாளி காயாகவே இருக்கிறது, இன்னும் கனியவில்லை’

 • 2

  (பழங்கள்) மிகவும் பழுத்துக் குழைவான நிலையை அடைதல்.

  ‘பலாப்பழம் கனிந்திருந்ததால் தின்பதற்கு மிகவும் தித்திப்பாக இருந்தது’
  ‘வாழைப்பழம் கனிந்துவிட்டது; இப்போதே தின்றுவிடு. நாளை வைத்திருந்தால் அழுகிவிடும்’
  உரு வழக்கு ‘கல்லையும் கனிய வைக்கும் பாடல்’

 • 3

  (அன்பு, காதல் போன்றவை) கனிவாக வெளிப்படுதல்.

  ‘கிழவர் தன் பேத்தியிடம் அன்பு கனியப் பேசினார்’

 • 4

  (காலம், வாய்ப்பு முதலியவை) ஏற்றதாக அல்லது பயன் தருவதாக அமைதல்.

  ‘காலம் கனியட்டும், காரியம் தானாகவே நடக்கும்’
  ‘வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நிலைமைகள் கனிந்துவருகின்றன’

 • 5

  (கரி, இரும்பு முதலியவை நெருப்பால்) செந்நிறம் அடைதல்.

  ‘கரி அடுப்பு கனிந்து எரிகிறது’

 • 6

  (மனம்) இளகுதல்.

  ‘கடவுளின் சந்நிதியில் மனம் கனிந்துருகி நின்றான்’
  ‘என் நிலைமையைப் பார்த்த பின்னும் உன் மனம் கனியவில்லையா?’
  ‘‘நீங்கள் மனம் கனிந்து வழங்கிய வாழ்க்கை இது’ என்று அவர் என்னிடம் நன்றியுடன் கூறினார்’

 • 7

  (பயன், உறவு முதலியன) ஏற்படுதல்; விளைதல்.

  ‘இந்தத் திட்டத்தினால் கனிந்திடும் பயன்கள் எண்ணற்றவையாகும்’
  ‘இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தொழில்துறையில் புதிய உறவுகள் கனிவதற்கு வகை செய்துள்ளது’

கனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கனி1கனி2கனி3

கனி2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பழம்.

கனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கனி1கனி2கனி3

கனி3

பெயர்ச்சொல்

 • 1

  (கூட்டுச் சொற்களில்) கனிமம்.

  ‘கனிவளம்’
  ‘கனிச்செல்வங்கள்’
  ‘கனிப்பொருள்’