தமிழ் கனிவு யின் அர்த்தம்

கனிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சு, பார்வை, செய்கை ஆகியவற்றில் அன்பு, பரிவு முதலியவற்றின்) நயமான வெளிப்பாடு.

    ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்’ என்றாள் கனிவோடு’
    ‘நோயாளிகளிடம் கனிவாகப் பேசினாலே பாதி நோய் போய்விடும்’