தமிழ் கம்பளி யின் அர்த்தம்

கம்பளி

பெயர்ச்சொல்

 • 1

  ஆட்டு ரோமத்தின் இழை.

  ‘கம்பளிச் சட்டை’
  ‘கம்பளிக் குல்லா’
  ‘கம்பளி நூல்’

 • 2

  கனமான பருத்தி அல்லது ஆட்டு ரோமத்தின் இழைகளால் நெய்யப்பட்ட போர்வை.

  ‘கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டால் குளிர் தெரியாது’
  ‘அவர் கம்பளி வியாபாரம் செய்கிறார்’