தமிழ் கம்மென்று யின் அர்த்தம்

கம்மென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எதையும் செய்யாமல்; பேசாமல்.

  ‘கொஞ்ச நேரம் கம்மென்று இரு!’
  ‘எதிர்த்துஎதிர்த்துப் பேசாதே, கம்மென்று கிட!’
  ‘குடித்துவிட்டு வந்து வீட்டில் கம்மென்று படுத்துக்கொண்டான்’

தமிழ் கம்மென்று யின் அர்த்தம்

கம்மென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மூக்கைத் துளைக்கும்படியாக; அருமையாக.

  ‘ரசம் கம்மென்று மணக்கிறது’
  ‘நீ என்ன சோப்புப் போட்டுக் குளித்தாய்? கம்மென்று வாசம் வருகிறதே!’