தமிழ் கர்மம் யின் அர்த்தம்

கர்மம்

பெயர்ச்சொல்

 • 1

  (தன் வாழ்நாளில் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய) கடமை.

  ‘‘கர்மத்தைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்பது கீதையின் சாரம்’

 • 2

  (பின்வரும் பிறவியில் பலன் தருவதாகக் கருதப்படும் முற்பிறவியின்) செயல்; வினை.

  ‘நான் இப்படி இருப்பதற்குப் போன பிறவியில் என்ன கர்மம் செய்தேனோ!’
  ‘நீ செய்த கர்மம் ஏழு பிறவிக்குப் போதும்’

 • 3

  (சாத்திரப்படி செய்ய வேண்டிய) சடங்கு.

  ‘வைதீகக் கர்மங்கள்’
  ‘சாவு சம்பந்தமான கர்மங்கள்’

 • 4

  பேச்சு வழக்கு வெறுப்பை அல்லது கண்டனத்தைத் தெரிவிக்கும் சொல்.

  ‘‘ஊரிலிருக்கும் சொறி நாய்களை எல்லாம் வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுகிறான், கர்மம், கர்மம்’ என்று அம்மா தலையிலடித்துக்கொண்டாள்’