தமிழ் கரு யின் அர்த்தம்

கரு

பெயர்ச்சொல்

 • 1

  (கருப்பையில் அல்லது முட்டையில்) வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருக்கும் உயிர்.

  ‘தான் வளருவதற்கான உணவைக் கரு தாயின் இரத்தத்திலிருந்து பெறுகிறது’

 • 2

  (கதை, கவிதை முதலியவற்றில்) மூலக் கருத்து.

  ‘இந்தக் கதைக்கான கரு ஒரு பிரயாணத்தின்போது கிடைத்தது’

 • 3

  (பண்டைய தமிழ் இலக்கியக் கோட்பாட்டில்) ஐந்து வகை நிலங்கள் ஒவ்வொன்றுக்கும் உரித்தான பொருள்.