தமிழ் கருக்கு யின் அர்த்தம்

கருக்கு

வினைச்சொல்கருக்க, கருக்கி

 • 1

  (ஒரு பொருளைச் சூட்டில் அல்லது நெருப்பில்) கருகச் செய்தல்.

  ‘கடலையை இப்படிக் கருக்கிவிட்டாயே!’
  ‘மஞ்சளைக் கருக்கி முகர்ந்தால் சளிக்கு நல்லது’

தமிழ் கருக்கு யின் அர்த்தம்

கருக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (பனை மட்டையின் இரு ஓரங்களிலும் உள்ள) பல் போன்ற கூர்முனை.

 • 2

  நுங்கின் மேல்பகுதியில் இருக்கும் துவர்ப்புச் சுவை மிகுந்த மெல்லிய தோல்.

தமிழ் கருக்கு யின் அர்த்தம்

கருக்கு

பெயர்ச்சொல்

 • 1

  பொலிவு.

  ‘புதுக் கருக்கு அழியாத பாத்திரங்களையும் அடகு வைத்துவிட்டாயே!’
  உரு வழக்கு ‘பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியே கருக்கு அழியாமல் இருக்கிறாள்’