தமிழ் கருணைக்கொலை யின் அர்த்தம்

கருணைக்கொலை

பெயர்ச்சொல்

  • 1

    மரணம் நிச்சயம் என்ற நிலையில், உபாதை மிகுந்து துன்பப்படுபவருக்கு மருந்து கொடுத்து அவருடைய உயிரைப் போக்கும் செயல்.

    ‘கருணைக்கொலையைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கோரி வருகின்றன’
    ‘வெளிநாட்டில் ஒரு மருத்துவர் பல கருணைக்கொலைகளைச் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்’