தமிழ் கருது யின் அர்த்தம்

கருது

வினைச்சொல்கருத, கருதி

 • 1

  மனத்தில் உணர்தல்; எண்ணுதல்; மதித்தல்.

  ‘திரைப்படத்தில் வரும் நிகழ்ச்சிகளை நடிப்பு எனக் கருதாமல் அழுபவர்கள் உண்டு’
  ‘உங்கள் பாராட்டைப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்’

 • 2

  ஆலோசித்துத் தீர்மானித்தல்.

  ‘இது ஒரு நல்ல திட்டம் அல்ல என்று நீ கருதினால் விட்டுவிடலாம்’

 • 3

  கருத்தில் கொள்ளுதல்.

  ‘மீனவர்களின் பாதுகாப்பைக் கருதிப் புயல் எச்சரிக்கை செய்யப்படுகிறது’
  ‘நீ உன் சுயநலத்தை மட்டும் கருதினால் நாங்கள் என்ன செய்வது?’