தமிழ் கருநாக்கு யின் அர்த்தம்

கருநாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (இயல்பாகவே) சிறு கரும் புள்ளிகளை உடைய நாக்கு.

    ‘பிறக்கும்போதே உனக்குக் கருநாக்காகத்தான் இருந்ததா?’

  • 2

    சொன்னது பலித்துவிடும் என்று கருதப்படும் தீய வாக்கு.

    ‘அவனுக்குக் கருநாக்கு; கடையை ஆரம்பித்தபோதே இது ரொம்ப நாள் நடக்காது என்று வாயை வைத்தான். அதுபோலவே ஆகிவிட்டது’