தமிழ் கருவி யின் அர்த்தம்

கருவி

பெயர்ச்சொல்

 • 1

  வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.

  ‘கற்காலக் கருவிகள்’
  ‘தச்சர் கருவி’
  ‘தொழில்நுட்பக் கருவிகள்’
  உரு வழக்கு ‘அவர்களைப் பழிவாங்க என்னை ஒரு கருவியாக நீங்கள் பயன்படுத்துவதா?’

 • 2

  சாதனம்; வழி.

  ‘மொழி என்பது கருத்தைத் தெரிவிக்கும் கருவி மட்டும்தானா?’