தமிழ் கருவூலம் யின் அர்த்தம்

கருவூலம்

பெயர்ச்சொல்

 • 1

  மதிப்பு மிகுந்த பொருள்களைச் சேர்த்துவைத்திருக்கும் இடம்.

  ‘அக்காலத்தில் அரண்மனைகளிலும் கோயில்களிலும் இருந்த கருவூலங்களில் பொன்னும் மணியும் நிறைந்திருந்ததாக அறிகிறோம்’
  உரு வழக்கு ‘இந்த நூல் இலக்கணக் கருத்துகளின் கருவூலம்’

 • 2

  அரசுக்குச் சேர வேண்டிய வரி, கட்டணம் போன்றவற்றைச் செலுத்துமிடமாகவும் அரசு தர வேண்டிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் இடமாகவும் செயல்படும் அலுவலகம்.

  ‘ஓய்வூதியத்தைத் துணைக் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்’