கரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரை1கரை2கரை3கரை4

கீரை1

பெயர்ச்சொல்

 • 1

  தோட்டங்களில் வளர்க்கப்படும் சில வகைச் செடிகளின் அல்லது முருங்கை, அகத்தி ஆகிய மரங்களின் (வேகவைத்து உண்ணக்கூடிய) இலை/உணவாகும் இலையைத் தரும் செடியைக் குறிக்கும் பொதுப் பெயர்.

கரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரை1கரை2கரை3கரை4

கரை2

வினைச்சொல்கரைய, கரைந்து, கரைக்க, கரைத்து

 • 1

  திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.

  ‘இந்தத் தண்ணீரில் சோப்பு வேகமாகக் கரைகிறது’
  ‘கடலின் ஆழத்தில் உள்ள நீரில் கரியமிலவாயு பெரும் அளவில் கரைந்திருக்கிறது’

 • 2

  (கற்பூரம் முதலிய பொருள்கள் காற்றில்) ஆவியாகி ஒன்றுமில்லாமல் போதல்.

 • 3

  (உடலில் ஏற்பட்ட கட்டி, பரு முதலியவை) அமுங்கி மறைந்துபோதல்.

  ‘‘மாத்திரை சாப்பிட்டால் போதும் இந்தக் கட்டி கரைந்துவிடும்’ என்றார் மாமா’

 • 4

  (இருப்பில் உள்ள பணம், சேமிப்பு) செலவழிதல்.

  ‘கையில் உள்ள பணமோ கரைந்துகொண்டிருக்கிறது. இன்னும் வேலை கிடைக்கவில்லை’

 • 5

  (மனம்) நெகிழ்தல்; உருகுதல்.

  ‘அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டதும் என் மனம் கரைந்தது’

கரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரை1கரை2கரை3கரை4

கரை3

வினைச்சொல்கரைய, கரைந்து, கரைக்க, கரைத்து

 • 1

  (காகம்) ‘கா, கா’ என்று ஒலி எழுப்புதல்.

கரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரை1கரை2கரை3கரை4

கரை4

வினைச்சொல்கரைய, கரைந்து, கரைக்க, கரைத்து

 • 1

  திரவங்களில் வாயுவை அல்லது திடப்பொருளைக் கலத்தல்; (ஒன்றின் பௌதிக வடிவத்தை) குறைத்தல்.

  ‘தோசை மாவில் உப்பைப் போட்டுக் கரைத்தாள்’
  ‘ஒரே நாளில் சோப்பை இப்படிக் கரைத்துவிட்டாயே!’
  ‘தாத்தாவின் சாம்பலைக் கன்னியாகுமரியில் கரைத்தார்கள்’

 • 2

  (உடலில் ஏற்பட்டுள்ள கட்டி, பரு முதலியவற்றை) மறையச் செய்தல்.

  ‘தலையிலிருந்த கட்டியைக் கரைக்க எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் பயன் இல்லை’

 • 3

  (பணத்தை) செலவழித்தல்.

  ‘அவன் காசைக் கரைக்கச் சிலர் கூடவே இருக்கிறார்கள்’

 • 4

  (மனத்தை) இளகச் செய்தல்.

  ‘அவள் கண்ணீர் அவன் மனத்தைக் கரைத்துவிட்டது’

கரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரை1கரை2கரை3கரை4

கரை

பெயர்ச்சொல்

 • 1

  நீரைத் தேக்கிவைக்க ஏரி, குளம் போன்றவற்றில் அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றின் ஓரங்களில் உயர்த்தப்பட்ட (மண்) மேடு.

  ‘ஆற்றின் கரையில் உள்ள மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன’

 • 2

  (சேலை, வேட்டி, துண்டு முதலியவற்றின்) ஓரத்தில் வேறு நிறத்தில் நெய்யப்பட்டிருக்கும் பகுதி.

  ‘ஜரிகைக் கரை வேட்டி கட்டியிருந்தார்’
  ‘கட்டியிருக்கும் வேட்டியின் கரையிலிருந்தே அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்’

 • 3

  (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) (ஒன்றை) ஒட்டி உள்ள பக்கம்.

  ‘அடுப்பங்கரை’
  ‘கிணற்றங்கரை’