கரைசேர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கரைசேர்1கரைசேர்2

கரைசேர்1

வினைச்சொல்

 • 1

  (தற்போது அனுபவித்துவரும்) சிரமமான நிலையிலிருந்து மீண்டுவருதல்.

  ‘ஊரெல்லாம் கடன் வாங்கியாகிவிட்டது. இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படிக் கரைசேரப்போகிறேன் என்று அவர் புலம்பினார்’

 • 2

  (உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு) நற்கதி அடைதல்; வீடு பேறு அடைதல்.

  ‘தீவிர பக்தியினால் பாமரனும் கரைசேர முடியும் என்று யோகி கூறினார்’

கரைசேர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கரைசேர்1கரைசேர்2

கரைசேர்2

வினைச்சொல்

 • 1

  (ஒருவர் தன் பொறுப்பில் உள்ள ஒருவரை) பாதுகாப்பான நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்.

  ‘என்னை நம்பியிருக்கும் இரண்டு தம்பிகளை நான் முதலில் கரைசேர்த்தாக வேண்டும்’

 • 2

  (தன் பொறுப்பில் உள்ள பெண்களை) கல்யாணம் செய்துகொடுத்தல்.

  ‘என் பெண்களையெல்லாம் எப்படிக் கரைசேர்க்கப்போகிறேனோ தெரியவில்லை’