தமிழ் கரைபுரள் யின் அர்த்தம்

கரைபுரள்

வினைச்சொல்-புரள, -புரண்டு

  • 1

    (ஆற்றில் வெள்ளம்) கரையை மீறி ஓடுதல்.

    உரு வழக்கு ‘குழந்தை பிறந்துவிட்டது; வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது’

  • 2

    (கூட்டம்) கட்டுமீறிப் போதல்.

    ‘தலைவரைக் காண மக்கள் கூட்டம் கரைபுரண்டு வந்தது’