தமிழ் கரை காணாத யின் அர்த்தம்

கரை காணாத

பெயரடை

  • 1

    (அளவிட்டுக் கூற முடியாத அளவுக்கு) மிக அதிகமான.

    ‘நடனத்தின் மீது அவளுக்குக் கரை காணாத ஆசை’
    ‘அந்தத் தலைவரின் பேச்சைக் கேட்கக் கரை காணாத கூட்டம் கூடியிருந்தது’