தமிழ் கற யின் அர்த்தம்

கற

வினைச்சொல்கறக்க, கறந்து

 • 1

  (பசு, ஆடு முதலிய விலங்குகளின் மடிக் காம்பிலிருந்து பாலை) பீய்ச்சி எடுத்தல்.

  ‘மாட்டை வீட்டுக்குக் கொண்டுவந்து பால் கறந்து தரும் வழக்கம் மறைந்துவருகிறது’

 • 2

  (பசு, ஆடு முதலிய விலங்குகள்) பால் தருதல்.

  ‘இந்த மாடு ஒரு படிதான் கறக்கிறதா?’

 • 3

  (நயமாகப் பேசியோ செயல்பட்டோ தேவையானதை) தரும்படி செய்தல்; வெளிக்கொண்டுவருதல்.

  ‘கடைக்காரர்கள் சிரித்துப் பேசி நம்மிடமிருந்து எப்படியாவது பணத்தைக் கறந்துவிடுகிறார்கள்’
  ‘இந்த அதிகாரியின் திறமை பிறரிடமிருந்து எப்படிப்பட்ட ரகசியத்தையும் கறந்துவிடுவதுதான்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு பிழிதல்.

  ‘பனம்பழத்தைக் கறந்து பனங்களி எடுக்க வேண்டும்’