தமிழ் கற்பனை யின் அர்த்தம்

கற்பனை

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்.

  ‘மிகுந்த கற்பனையுடன் உருவாக்கப்பட்ட தோட்டம்’
  ‘ராக ஆலாபனையில் அவருடைய கற்பனையின் வீச்சு தெரிந்தது’

 • 2

  இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது.

  ‘அவர் பணத்தைத் திருடிவிட்டார் என்பது உன் கற்பனை’
  ‘உன்னைப் பற்றி நீயே தாழ்வாகக் கற்பனை செய்துகொள்ளாதே’
  ‘அட்சரேகை, தீர்க்கரேகை என்பதெல்லாம் ஒரு வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட கற்பனைக் கோடுகள்’
  ‘இந்த நாவலின் கதை சலாமியா என்னும் கற்பனை நாட்டில் நடப்பதாக அமைந்திருக்கிறது’