தமிழ் கறார் யின் அர்த்தம்

கறார்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஏற்றுக்கொண்ட அல்லது ஏற்படுத்திக்கொண்டிருக்கிற நெறிமுறைகளிலிருந்து) சற்றும் விலகாத கண்டிப்பு அல்லது விட்டுக்கொடுக்காத தன்மை.

    ‘அவர் கறார்ப் பேர்வழி’
    ‘அவரிடம் கடன் வாங்கினால் வட்டியைக் கறாராக வசூலித்துவிடுவார்’
    ‘வியாபாரத்தில் எல்லா நேரங்களிலும் கறாராக இருக்க முடியாது’