தமிழ் கறி யின் அர்த்தம்

கறி

பெயர்ச்சொல்

 • 1

  மாமிசம்; இறைச்சி.

  ‘ஆட்டுக் கறி கிலோ என்ன விலை?’
  ‘தோசைக்குக் கறிக் குழம்பு’

 • 2

  (ஏதேனும் ஒரு காய்கறியை அல்லது இறைச்சியைத் துண்டுதுண்டாக நறுக்கி வேகவைத்துச் செய்யப்படும்) குழகுழப்பான அல்லது கெட்டியான உணவுப் பண்டம்.

  ‘முட்டைகோஸ் கறி’
  ‘மீன் கறி’

 • 3

  வட்டார வழக்கு குழம்பு.

  ‘புளி இல்லாத கறி வைத்திருக்கிறேன்’

 • 4

  அருகிவரும் வழக்கு (இரத்தச் சிவப்புடன் காணப்படும்) சதை.

  ‘மாட்டை அடித்த அடியில் கறி பிய்ந்து தொங்குகிறது’