தமிழ் கறு யின் அர்த்தம்

கறு

வினைச்சொல்கறுக்க, கறுத்து

 • 1

  இருட்டிக்கொண்டு வருதல்.

  ‘வானம் கறுத்திருக்கிறது, மழை வரலாம்’

 • 2

  (வெயிலால், வியாதியால் உடல்) கறுப்பு நிறம் அடைதல்.

  ‘வெயிலில் அலைந்து ஆள் கொஞ்சம் கறுத்துவிட்டான்’

 • 3

  (அவமானம், கடும் கோபம் முதலியவற்றால் முகம்) ஒளி இழத்தல்.

  ‘பயத்தால் முகம் வெளிறும், அவமானத்தால் கறுக்கும்’
  ‘கோபத்தில் அவர் முகம் கன்றிக் கறுத்திருந்தது’

தமிழ் கீறு யின் அர்த்தம்

கீறு

வினைச்சொல்கீற, கீறி

 • 1

  (கூரிய முனையுடைய பொருள் ஒரு பரப்பில் கோடுபோல்) கிழித்தல்.

  ‘வேலியைத் தாண்டும்போது காலில் முள் கீறிவிட்டது’
  ‘உடம்பில் பட்டால் கீறிவிடும் அளவுக்கு அவளது நகம் கூர்மையாக இருந்தது’

 • 2

  (கத்தி போன்ற ஆயுதத்தால்) கோடு போல் நீளவாக்கில் வெட்டுதல்.

  ‘பாம்பின் அடிவயிற்றில் கீறித் தோலை உரிக்கிறார்கள்’
  ‘பூசணியைக் கீறி விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள்’
  ‘மருத்துவர் கட்டியைக் கீறிவிட்டு மருந்து வைத்துக் கட்டினார்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (கோடு) இழுத்தல்; (படம்) வரைதல்.

  ‘கோடு கீறு!’
  ‘அவள் மிக வடிவாகப் படம் கீறுவாள்’

தமிழ் கீறு யின் அர்த்தம்

கீறு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (தேங்காய் முதலியவற்றின்) கீற்று.

  ‘கத்தியால் தேங்காய் மூடியைக் கீறு போட்டார்’