தமிழ் கறுவு யின் அர்த்தம்

கறுவு

வினைச்சொல்கறுவ, கறுவி

  • 1

    (முன்விரோதம், போட்டி, சண்டை முதலியவை காரணமாக) மனத்திற்குள் வஞ்சம் வளர்த்தல்; பழிதீர்ப்பதாகப் பேசுதல்.

    ‘எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்தியவனைப் பழிவாங்காமல் விட மாட்டேன் என்று கறுவினான்’
    ‘போட்டியில் என்னிடம் தோற்றதிலிருந்து கறுவிக்கொண்டு திரிகிறான்’