தமிழ் கறை யின் அர்த்தம்

கறை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின்) தூய்மையை, அழகைக் கெடுக்கும் அழுக்கு; எளிதில் நீக்க முடியாத மாசு; ஒரு திரவம் பட்டு உண்டாகும் படிவு.

  ‘வேட்டியில் காப்பி கொட்டிக் கறையாகிவிட்டது’
  ‘அரிவாளில் இரத்தக் கறை’
  உரு வழக்கு ‘எங்கள் தலைவரின் கைகள் கறை படியாதவை’

 • 2

  களங்கம்.

  ‘உன் நடத்தை நம் குடும்பத்துக்கு அழியாத கறையை ஏற்படுத்திவிட்டது’