தமிழ் கலகக்காரர் யின் அர்த்தம்

கலகக்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆயுதம் ஏந்தி) ஆட்சியாளரை, அதிகாரத்தை எதிர்ப்பவர்.

    ‘கலகக்காரர்களை அடக்க ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது’

  • 2

    சமூகத்தில் நிலவிவரும் மதிப்பீடுகளை (கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றின் மூலம்) எதிர்த்துக் குரல் கொடுப்பவர் அல்லது அவற்றுக்கு எதிரான முறையில் வாழ்பவர்.

    ‘பெரியாரை ஒரு கலகக்காரர் என்று சொல்லலாம்’