தமிழ் கலக்கம் யின் அர்த்தம்

கலக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உறுதியான முடிவை எடுக்க இயலாத) தெளிவற்ற மனநிலை; குழப்பம்.

  ‘அறிவுத் தெளிவு இருந்தால் கலக்கமின்றி நிதானமாக நல்ல முடிவுகள் எடுக்க முடியும்’

 • 2

  (தெளிவற்ற மனநிலையில் ஏற்படும்) அச்ச உணர்வோடு கூடிய குழப்பம்.

  ‘குழந்தையைக் காணாமல் கலக்கத்துடன் நின்றிருந்தாள்’
  ‘எதிர்காலத்தை நினைக்கநினைக்கக் கலக்கம்தான் அதிகரிக்கிறது’