தமிழ் கலகம் யின் அர்த்தம்

கலகம்

பெயர்ச்சொல்

 • 1

  அமைதியைக் குலைக்கும் சண்டை; குழப்பம்.

  ‘பொதுக் கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தவர்களை வழிமறித்துக் கலகம்செய்தனர்’
  ‘கூட்டத்தில் கலகம் உண்டாக்கச் சிலர் முயன்றார்கள்’

 • 2

  (ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான) கிளர்ச்சி.

  ‘ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராகக் கலகம்செய்த சிப்பாய்கள் ஒடுக்கப்பட்டனர்’
  ‘உள்நாட்டுக் கலகம் மூண்டது’