தமிழ் கலகலப்பு யின் அர்த்தம்

கலகலப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பேச்சும் சிரிப்புமாக அல்லது ஆட்கள் நடமாட்டத் தால்) ஆரவாரத்தோடு இருக்கும் நிலை.

  ‘சித்தப்பா சிரிக்கச்சிரிக்கப் பேசுவார்; அவர் வந்துவிட்டால் வீட்டில் கலகலப்புதான்’
  ‘குழந்தைகள் இருக்கும் இடங்களில் எப்போதும் கலகலப்புக்குக் குறைவில்லை’

 • 2

  (பேச்சில் அல்லது பழகுவதில்) தங்குதடையற்ற, இயல்பான நிலை.

  ‘அவள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் கலகலப்புடன் என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள்’
  ‘எல்லாரும் என்னிடம் கலகலப்பாகப் பழகுகிறார்கள்’