தமிழ் கலங்கல் யின் அர்த்தம்

கலங்கல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நீர், எண்ணெய் போன்ற திரவங்களின்) கலங்கிய நிலை.

  ‘கலங்கலான நீர்’
  ‘மண்ணெண்ணெய் கலங்கலாக இருக்கிறது’
  ‘அருகில் இருந்த ஆலைகளின் கழிவுகளால் கிணறுகளில் நீர் கலங்கலாக மாறிவிட்டது’
  ‘முத்துச்சிப்பிகளுக்குக் கலங்கலான நீர் ஆகாது’

 • 2

  (பனி, மழை போன்றவற்றால் உருவம்) தெளிவில்லாமல் காணப்படும் நிலை.

  ‘மாரியம்மன் கோவில் உள்ளே மண்டியிருந்த புகையில் அவன் உருவம் கலங்கலாகத் தெரிந்தது’