தமிழ் கலங்கு யின் அர்த்தம்

கலங்கு

வினைச்சொல்கலங்க, கலங்கி

 • 1

  (நீர், எண்ணெய் போன்ற திரவங்கள் பிறவற்றுடன் சேர்ந்து) தெளிந்த நிலை கெடுதல்; குழம்புதல்.

  ‘மழையால் குளத்தில் நீர் கலங்கியிருக்கிறது’

 • 2

  (கண்ணின் இயற்கையான வெண்ணிறம் மறைந்து) சிவந்திருத்தல்.

  ‘உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன? கசக்கினாயா?’

 • 3

  கண்ணீர் மல்குதல்; தளும்புதல்.

  ‘நன்றி உணர்வுடன் கண்கள் கலங்கக் கும்பிட்டுவிட்டு மருத்துவரிடமிருந்து அவள் விடைபெற்றாள்’
  ‘மகளைப் பிரியும்போது கண்கள் கலங்காமல் இருக்குமா?’

 • 4

  (மனம்) வருந்துதல்; துயரமடைதல்.

  ‘தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து அவர் கலங்கினார்’
  ‘மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டியதாகிவிட்டதே என்று அவன் கலங்கினான்’