தமிழ் கலந்துகட்டி யின் அர்த்தம்

கலந்துகட்டி

வினையடை

  • 1

    தனித்தன்மையோ குறிப்பிடத் தகுந்த அம்சமோ இல்லாமல்.

    ‘எதற்கு இப்படிக் கலந்துகட்டி ஒரு படம் எடுக்கிறார்களோ தெரியவில்லை?’

  • 2

    தனித்தனியாக இல்லாமல் எல்லா இனத்திலும் ஒன்றிரண்டு என்ற வகையில்.

    ‘மைசூர்ப்பாகு அரை கிலோவும் மற்றதெல்லாம் கலந்துகட்டி ஒரு கிலோ இனிப்பும் வாங்கிக்கொள்’