தமிழ் கலந்துகொள் யின் அர்த்தம்

கலந்துகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றில் ஒருவர்) பங்குகொள்ளுதல்; பங்கேற்றல்.

  ‘விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி’
  ‘போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது’
  ‘பொதுக்குழுக் கூட்டத்தில் பத்து உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை’
  ‘என் தங்கையின் திருமணத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை’