தமிழ் கல்லா யின் அர்த்தம்

கல்லா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பழைய பாணியில் நடத்தப்படும் கடையில்) (பொருளுக்கான) பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இடம்.

    ‘கல்லாவில் அமர்ந்து பணம் வாங்கிக்கொண்டிருந்தார்’

  • 2

    (பொருளுக்கான) பணத்தை வாங்கிப் போட்டுவைக்கும் பணப் பெட்டி.

    ‘எனக்கு மீதிப் பணம் கொடுக்கக் கல்லாவைத் திறந்தார்’