தமிழ் கல்லா கட்டு யின் அர்த்தம்

கல்லா கட்டு

வினைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (வியாபாரம் தொடர்பாக வரும்போது) விற்பனை செய்தல்.

  ‘கடையைத் திறந்து ஒரு மணி நேரம் ஆகியும் இதுவரை ஐந்து ரூபாய்கூட நான் கல்லா கட்டவில்லை’
  ‘அவருக்கு நல்ல வியாபாரம்; மத்தியானத்திற்குள் ஆயிரம் ரூபாய்க்குக் கல்லா கட்டிவிடுவார்’

 • 2

  பேச்சு வழக்கு (ஒரு நாளின் முடிவில் விற்பனைத் தொகையை எண்ணிப்பார்த்து) கணக்குவழக்கை முடித்தல்.

  ‘கடையில் சரியான கூட்டம். கல்லா கட்டுவதற்கு இரவு ஒரு மணி ஆகிவிட்டது’