தமிழ் கல்வெட்டு யின் அர்த்தம்

கல்வெட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலியவற்றைக் குறித்து) பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகம்.

  ‘சோழர் காலக் கல்வெட்டுகள்’
  ‘குகையில் இருந்த கல்வெட்டு ஒன்றைத் தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது’

தமிழ் கல்வெட்டு யின் அர்த்தம்

கல்வெட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர் இறந்த முப்பத்தொன்றாம் நாள் சடங்கில் வெளியிடப்படும்) இரங்கற்பா.

  ‘யாரைக் கொண்டு உன் அம்மாவின் கல்வெட்டை எழுதுவிக்கப்போகிறாய்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு இறந்தவரின் நினைவாக அச்சிட்டு வழங்கும் புத்தகம்.

  ‘தகப்பனின் அந்தியேட்டிக்கு மருத்துவக் குறிப்புகளைக் கல்வெட்டாக அடித்துவிட்டார்’