கலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கலை1கலை2கலை3கலை4

கலை1

வினைச்சொல்கலைய, கலைந்து, கலைக்க, கலைத்து

 • 1

  (அடுக்கு, வரிசை முதலியன) சீர்கெடுதல்; குலைதல்.

  ‘மடித்து அடுக்கிவைத்திருந்த துணிகள் கலைந்துகிடந்தன’
  ‘ஊர்வலத்தினர் வரிசை கலையாமல் அமைதியாகச் சென்றனர்’
  ‘தலைமுடி கலைந்து காதுகளை மூடியது’

 • 2

  (தூக்கம், தியானம் முதலியவை) நீங்குதல்; அகலுதல்.

  ‘எங்களிடையே நிலவிய மௌனம் அவருடைய கேள்வியால் கலைந்தது’
  ‘கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்தது’

 • 3

  (அலுவல் நேரம்) முடிதல்.

  ‘அந்த வாலிபரை நீதிமன்றம் கலையும்வரையிலும் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது’

 • 4

  (கூட்டம், மேகம் முதலியவை) பிரிதல்; பிரிந்து செல்லுதல்.

  ‘மழை வரும் போலிருந்தது; ஆனால் மேகம் கலைந்துவிட்டது’
  ‘விழா முடிந்ததும் கூட்டம் கலைந்தது’

 • 5

  (எழுதப்பட்டது, வரையப்பட்டது) அழிதல்.

  ‘நெற்றியில் குங்குமம் கலைந்திருந்தது’
  ‘பலருடைய காலடி பட்டுக் கோலம் கலைந்திருந்தது’

 • 6

  (உருவாகியிருந்த கரு) சிதைதல்.

  ‘அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் கரு கலைந்ததாக மருத்துவர் கூறினார்’

கலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கலை1கலை2கலை3கலை4

கலை2

வினைச்சொல்கலைய, கலைந்து, கலைக்க, கலைத்து

 • 1

  (அடுக்கு, வரிசை முதலியவற்றை) ஒழுங்கற்றதாக ஆக்குதல்; குலைத்தல்.

  ‘தயவுசெய்து அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களை எடுத்துக் கலைக்காதீர்கள்’
  ‘வாரியிருந்த தலைமுடியைச் சட்டென்று வீசிய காற்று கலைத்துவிட்டது’
  ‘சீட்டைக் கலைத்துப் போடு!’

 • 2

  (தூக்கம், தியானம் முதலியவை மேற்கொண்டு) நீடிக்காதவாறு செய்தல்.

  ‘சத்தம்போட்டுப் பேசித் தாத்தாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டாயே!’
  ‘தன் தவத்தைக் கலைத்தவர்களுக்கு முனிவர் சாபம் கொடுத்தார்’
  ‘அவர் தனது எழுத்துலக மௌனத்தைக் கலைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய கதை இது’

 • 3

  (கூட்டம், மேகம் முதலியவற்றை) பிரிந்து போகவைத்தல்.

  ‘கும்பலைக் கலைக்கக் காவலர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்தனர்’
  ‘சூறாவளிக் காற்று மேகங்களைக் கலைத்துவிட்டது’

 • 4

  (எழுதப்பட்டதை, வரையப்பட்டதை) அழித்தல்.

  ‘நெற்றிக் குங்குமத்தை வியர்வை கலைத்திருந்தது’
  ‘தவழ்ந்து சென்ற குழந்தை கோலத்தைக் கலைத்துவிட்டது’

 • 5

  (சட்டமன்றம், அமைச்சரவை முதலியவற்றில் உள்ளவர்களை) அதிகாரம் இழக்கச் செய்தல்.

  ‘பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத்தேர்தல் நடத்தப் பிரதமர் உத்தேசித்துள்ளார்’

 • 6

  (கட்சி, அமைப்பு முதலியவற்றை) இல்லாமல் ஆக்குதல்.

  ‘தங்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு ஜனநாயக முறைக்கு வரும்படி தீவிரவாதிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்’

 • 7

  (உருவாகியிருக்கும் கருவை) சிதைத்தல்; அழித்தல்.

  ‘ஆரம்ப நிலையிலிருக்கும் கருவைக் கலைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமாகாது’

 • 8

  (மனத்தை) கெடுத்தல்.

  ‘யாரோ அவன் மனத்தைக் கலைத்திருப்பதால்தான் சொத்தைப் பிரிக்கச் சொல்கிறான்’

 • 9

  (ஒப்பனையை) நீக்குதல்.

  ‘நாடகம் முடிந்ததும் கதாநாயகி ஒப்பனையைக் கலைத்துக்கொண்டிருந்தார்’
  உரு வழக்கு ‘நீ போட்டிருக்கும் நல்லவன் வேடத்தைக் கலைக்கும்வரை நான் ஓய மாட்டேன் என்றான்’

 • 10

  இலங்கைத் தமிழ் வழக்கு துரத்துதல்; விரட்டுதல்.

  ‘நாய் ஆட்டைக் கலைத்துக்கொண்டு சென்றது’
  ‘என்னை வீட்டை விட்டுக் கலைக்கப்போகிறாயா?’

கலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கலை1கலை2கலை3கலை4

கலை3

பெயர்ச்சொல்

 • 1

  பார்ப்பவர், கேட்பவர் முதலியோர் மனத்தில் அழகுணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் (அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில்) மக்கள் வெளிப்படுத்தும் நடனம், இசை, இலக்கியம் போன்றவை.

  ‘இந்தத் திரைப்படம் ஒரு அற்புதமான கலைப்படைப்பு’
  ‘கலை அம்சம் துளியும் இல்லாத நடனம்’

 • 2

  தொழில்திறன் நிரம்பியது.

  ‘சமையல் கலை’
  ‘பீடா சுற்றுவதும் ஒரு கலைதான்’

கலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கலை1கலை2கலை3கலை4

கலை4

பெயர்ச்சொல்

 • 1

  நிலவின் வளர்ச்சிக் கட்டம்.