வினைச்சொல்கலக்க, கலந்து
- 1
(ஒரு திட, திரவ அல்லது வாயுப் பொருளோடு மற்றொரு திட, திரவ அல்லது வாயுப் பொருளை) சேர்த்தல்.
‘இரண்டு மருந்தையும் கலந்து குடிக்கலாமா?’‘தண்ணீர் கலக்காத தரமான பால்’‘சிமிண்டில் சாம்பலைக் கலந்து விற்கிறார்களா?’‘கரியமிலவாயு கலந்த காற்றை அதிக அளவு சுவாசித்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது’ - 2
(ஒன்றில் மற்றொன்று) சேர்தல்; (ஒன்றில் மற்றொன்றாக) சேர்த்தல்; விரவுதல்/(தனித்தனியாக இருக்க வேண்டியவை) ஒன்றோடு ஒன்றாகக் கிடத்தல்.
‘இருபது சதவீதம் பருத்தி கலந்த துணி’‘தமிழில் ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் அவர் பேசுவார்’‘விருந்தினரின் துணி வீட்டுத் துணியோடு கலந்துவிட்டது’ - 3
(கூட்டத்தில் ஒருவராக) சேர்தல்.
- 4
(ஒன்றில் ஒன்றைச் சேர்த்து) தயாரித்தல்.
‘விருந்தினர்களுக்கு அம்மா காப்பி கலந்து தந்தாள்’ - 5
(ஆறு, ஓடை போன்றவை கடலில் அல்லது மற்றொரு நீரோட்டத்தில்) வந்து சேர்தல்.
‘வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீரைத் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம்’ - 6
(ஒரு பிரச்சினை, தீர்மானம் முதலியவை தொடர்பாக ஒருவரோடு) ஆலோசித்தல்.
‘என் திருமணத்தைப் பற்றி அம்மாவைக் கலக்காமல் முடிவு சொல்ல முடியாது’‘வறட்சியைச் சமாளிக்கும் வழிகள்பற்றி அமைச்சர் செயலாளர்களோடு கலந்து பேசினார்’ - 7
அருகிவரும் வழக்கு (உடலுறவில்) சேர்தல்.
‘தூங்கும் ஒருத்தியைக் கலந்து இன்புற்றதைக் கூறும் கதைகள் உண்டு’ - 8
ஐக்கியமாதல்.
‘சில அருளாளர்கள் இறைவனின் சோதியில் கலந்து மறைந்ததாக வரலாறு தெரிவிக்கிறது’‘மனம் கலந்து பழகினோம்’
வினைச்சொல்கற்க, கற்று
- 1
(அறிவு பெறும் முறையில்) படித்தல்; (ஒரு துறையில்) தேர்ச்சி பெறுதல்.
‘சொற்களும் தொடர்களும் பழக்கமாகும்வரை பண்டைய இலக்கியங்களைக் கற்பது கடினமாக இருக்கும்’‘யாப்பை மட்டும் கற்றுக் கவிஞன் ஆக முடியாது’‘மொழியைக் கற்பது எளிதாகிவருகிறது’‘நாம் கல்வி கற்பதன் நோக்கம் என்ன?’ - 2
(செய்முறைப் பயிற்சிகளின் வழியாக ஒன்றை) பழகுதல்.
‘கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ - 3
(ஒரு நிகழ்ச்சி, அனுபவம் போன்றவற்றின் மூலம் ஒன்றை) தெரிந்துகொள்ளுதல்.
‘இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் கற்ற பாடம் என்ன?’‘அவனிடம் பழகியதிலிருந்து நான் கற்றுக்கொண்ட உண்மை என்னவென்றால் யாரையும் சீக்கிரத்தில் நம்பிவிடக்கூடாது என்பதுதான்’
பெயர்ச்சொல்
- 1
கதவு, பெட்டியின் மூடி முதலியவற்றைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தும் உலோகப் பட்டை.
பெயர்ச்சொல்
- 1
(இயற்கையாகக் கிடைப்பது அல்லது கிடைப்பதைப் பயன்படுத்துவது)
- 1.1 மலை, குன்று, பாறை ஆகியவற்றிலிருந்து சிறுசிறு துண்டுகளாக உடைத்து எடுப்பதும் அல்லது சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுவதும் கடினத் தன்மை உடையதுமான இயற்கைப் பொருள் ‘கிணற்றடியில் போடப்பட்டிருந்த கல்லில் துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள்’‘நான் உணர்ச்சியே இல்லாத கற்சிலை அல்ல’‘குரங்கின் மேல் கல் எறியாதே!’‘சோற்றில் கல் கிடந்தது’‘உன் நெஞ்சு என்ன கல்லா?’
- 1.2 அணிகலன்களில் பதிக்கும் வைரம், மரகதம் போன்ற இயற்கையாகக் கிடைக்கும் பொருள் ‘வைரக் கல் தோடு’‘சிவப்புக் கல் மூக்குத்தி’‘கல் வளையல்’
- 1.3காண்க: மைல்கல்
- 1.1 மலை, குன்று, பாறை ஆகியவற்றிலிருந்து சிறுசிறு துண்டுகளாக உடைத்து எடுப்பதும் அல்லது சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுவதும் கடினத் தன்மை உடையதுமான இயற்கைப் பொருள்
- 2
(செயற்கையாகச் செய்யப்படுவது)
- 2.1 (பெரும்பாலும் கைக்கடிகாரத்தின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்) செயற்கை வைரம்
- 2.2 (உப்பு போன்றவற்றில்) ஒரு சிறு குருணை ‘குழம்புக்கு ஒரு கல் உப்பு போடு’
- 2.3காண்க: செங்கல்
- 2.4காண்க: எடைக்கல்
- 2.5 தோசைக்கல், ஆட்டுக் கல், அம்மிக்கல், சப்பாத்திக்கல், பணியாரக் கல் போன்றவற்றின் பொதுப் பெயர் ‘அடுப்பில் கல் காய்கிறது’‘கல்லில் வைத்து மிளகாயை அரைத்தேன்’
- 3
(பிற வழக்கு)
- 3.1 சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் சிறு உருண்டை வடிவத்தில் உருவாவது ‘சிறுநீரகத்தில் பெரிய கல் உண்டாகியிருப்பதால் அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறினார்’
- 3.2அருகிவரும் வழக்கு மைல் ‘மாமல்லபுரக் கடற்கரையிலிருந்து வடக்கு நோக்கி 3 கல் தூரம் சென்றால் குகை மண்டபம் ஒன்று இருக்கும்’‘நீங்கள் கேட்ட கிராமம் இங்கிருந்து 5 கல் தொலைவில் இருக்கிறது’
- 3.1 சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் சிறு உருண்டை வடிவத்தில் உருவாவது
பெயர்ச்சொல்
- 1
(கறையான் அரிக்காமல் இருக்க மரச் சாமான்களுக்குப் பூசப்படும் திரவ நிலையில் உள்ள) தார்.