தமிழ் கலவி யின் அர்த்தம்

கலவி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஆண், பெண்) சேர்க்கை; புணர்ச்சி.

தமிழ் கல்வி யின் அர்த்தம்

கல்வி

பெயர்ச்சொல்

 • 1

  (பள்ளி, கல்லூரி போன்றவற்றின் மூலம் கிடைக்கும்) முறைப்படுத்தப்பட்ட அறிவு; படித்துப் பெறும் அறிவு.

  ‘அனைவருக்கும் கல்வி தர வேண்டும்’
  ‘கல்வித் துறை’
  ‘மருத்துவக் கல்வி’

 • 2

  குறிப்பிட்ட படிப்பு அல்லது பயிற்சி.

  ‘சுகாதாரக் கல்வி’
  ‘பாலியல் கல்வி’