தமிழ் களங்கம் யின் அர்த்தம்

களங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவருடைய நற்பெயருக்கு அல்லது குடும்பத்தின் பெருமைக்கு வந்து சேரும் கெட்ட பெயர்.

  ‘உங்கள் புகழுக்குக் களங்கம் கற்பிக்கப்பார்க்கிறார்கள்’
  ‘தந்தை மேல் திருட்டுக் குற்றம்; குடும்பத்துக்கு இப்படி ஒரு களங்கமா?’

 • 2

  (பெண்ணைக் குறிப்பிடும்போது) நடத்தையில் கெட்ட பெயர்.

  ‘பெண்ணுக்குக் களங்கம் கற்பித்துத் திருமணத்தை நிறுத்த முயற்சி’