தமிழ் களம் யின் அர்த்தம்

களம்

பெயர்ச்சொல்

 • 1

  கதிரடிக்கும் இடம்; களத்துமேடு.

  ‘களத்தில் இருக்கும் அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டுபோக வேண்டும்’

 • 2

  (ஆய்வுக்கு உரியதாக அல்லது ஆய்வின் தொடர்பாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்) ஊர்; இடம்.

  ‘களத்திற்குச் செல்லும் முன் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன’

 • 3

  (கதை, பாடல் முதலியவற்றில்) நிகழ்ச்சி நடக்கும் இடம்.

  ‘நாடகத்தில் களம் மாறுகிறது’
  உரு வழக்கு ‘சிந்தனைக் களம்’

 • 4

  (தேர்தல், போராட்டம், போர் முதலியவை) நடைபெறும் இடம்.

  ‘களம் பல கண்ட வீரர்கள் நிறைந்தது நம் கட்சி’
  ‘களத்தில் இருக்கிற ஐந்து வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவார்?’

 • 5

  விளையாட்டு மைதானம்; ஆடுகளம்.

  ‘மழை பெய்திருந்ததால் களத்தில் தண்ணீர் நின்றிருந்தது’
  ‘நடுவர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துப் பார்வையாளர்கள் களத்தில் புகுந்து கலாட்டா செய்தனர்’