தமிழ் கள்ள யின் அர்த்தம்

கள்ள

பெயரடை

 • 1

  சட்டவிரோதமாகவும் லாப நோக்கத்தோடும் செய்யப்படுகிற அல்லது நடத்தப்படுகிற.

  ‘கள்ளச் சாராயம்’
  ‘கள்ளச் சரக்கு’

 • 2

  (திருமண உறவுக்குப் புறம்பாக) பிறர் அறியாமல் ஒருவர் கொண்டிருக்கும்.

  ‘கள்ளக் காதல்’
  ‘கள்ளக் காதலி’
  ‘கள்ளப் புருஷன்’
  ‘கள்ளத் தொடர்பு’

 • 3

  பிறர் அறியாதவாறு குறிப்பாக வெளிப்படுத்தும்.

  ‘கள்ளச் சிரிப்பு’
  ‘கள்ளப் பார்வை’

 • 4

  உண்மையாக இல்லாத; பாவனையான.

  ‘கள்ளச் சாட்சி’
  ‘கள்ளத் தூக்கம்’