தமிழ் கள்ளத்தனம் யின் அர்த்தம்

கள்ளத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    திருட்டுத்தனம்.

    ‘கட்டடத்தினுள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற இருவரும் காவலரிடம் பிடிபட்டனர்’
    ‘தமிழ்த் திரைப்படங்களின் குறுந்தகடுகளைக் கள்ளத்தனமாகத் தயாரித்துவந்த மூவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்’
    ‘அவன் அரைக்கண்ணால் அவளைக் கள்ளத்தனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்’