தமிழ் கள்ளன் யின் அர்த்தம்

கள்ளன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு திருடன்.

 • 2

  பேச்சு வழக்கு (கேலித் தொனியில்) உண்மையை மறைப்பவன்.

  ‘இவனுக்கு எல்லாம் தெரியும், ஆனால் சொல்லமாட்டான். சரியான கள்ளன்!’

 • 3

  பேச்சு வழக்கு வாழைப்பூவில் சீப்பு போல இருக்கும் இதழ்களின் உள்ளே மறைந்திருக்கும், நுனியில் கறுப்பாக இருக்கும் கம்பி போன்ற சூல்தண்டு.

  ‘வாழைப்பூவை ஆயும்போது கள்ளனை நீக்க வேண்டும்’